undefined

வயல்வெளியில் கஞ்சா விற்பனை.. இளைஞரை சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்!

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிக அளவில் கஞ்சா புழக்கத்தில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் கஞ்சா போதைக்கு அடிமையாகி வருகின்றனர். கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையும் மீறி போலீசார் கண்ணில் மண்ணை தூவி  கஞ்சா விற்பனை கட்டுப்பாடில்லாமல் பல இடங்களில் நடந்து வருகிறது.

இந்நிலையில், கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், கஞ்சா விற்பனையாளர்களை கைது செய்த பின்னரும், கஞ்சா விற்பனையைத் தடுக்க போலீஸார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இருந்தும் கஞ்சா விற்பனை தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த வேட்டங்குடி கிராமம் அருகே உள்ள வயல் பகுதியில் விவசாய கூலித் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்தது. புகாரின் பேரில் புதுப்பட்டினம் போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது வேட்டங்குடி வடக்குத் தெருவைச் சேர்ந்த தர்மலிங்கம் மகன் மகன் கனகராஜ் என்ற 23 வயது வாலிபர் வயல்வெளியில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா விற்ற கனகராஜை சுற்றி வளைத்த போலீசார், அவரை கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சீர்காழி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதி உத்தரவுப்படி, சீர்காழி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!