undefined

 துக்க நிகழ்வில் பங்கேற்ற போது சோகம்... லாரி மோதி தாய், 2 மகன்கள் உயிரிழப்பு!

 
 

சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், இரு மகன்கள் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு. இவரது மனைவி கஜலட்சுமி(40). இவர்களது மகன்கள் மதன்(20), மனோஜ்(18). 

கஜலட்சுமியும் அவரது இரு மகன்களும் என மூன்று பேரும் காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றனர். துக்க நிகழ்வில் பங்கேற்றுவிட்டு 3 பேரும் ஓரே மோட்டார் சைக்கிளில் தங்கள் வீட்டுக்குத் திரும்பினர். மனோஜ் மோட்டார் சைக்கிளை ஒட்டிச் சென்றார். இவர்கள் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தாமல் பகுதியில் செல்லும்போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி இவர்கள் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி கஜலட்சுமி, மதன், மனோஜ் ஆகியோர் கீழே விழுந்தனர். இதில் மூவரும் லாரியின் சக்கரத்தில் சிக்கினர். இதில் மனோஜ், கஜலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அருகாமையில் இருந்தவர்கள் ஓடி வந்து மனோஜை மீட்டனர். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

இது தொடர்பாக பாலுசெட்டி சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்தவர்களின் சடலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!