undefined

சோகம்... சுருக்கு கம்பியில் சிக்கி புலி மரணம்... 3 பேர் கைது!

 

நீலகிரி மாவட்டம், கூடலுார் இரண்டாவது மைல் அருகே செலுக்காடி தனியார் எஸ்டேட் பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் புலி ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து முதுமலை கள இயக்குனர் கிருபாசங்கர், கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, உதவி வன பாதுகாவலர் கருப்பையா, வனச்சரகர் ராதகிருஷ்ணன் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.

வனத்துறையினரின் ஆய்வில் சுருக்கு கம்பி கழுத்தில் சிக்கியதில் புலி உயிரிழந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு, அதன் உதவியுடன் அப்பகுதியில் வன ஊழியர்கள் ஆய்வில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து புலியின் உடலையும் பிரேத பரிசோதனை செய்தனர். அதன் பின்னர் புலியின் உடல் அங்கேயே எரிக்கப்பட்டது. புலிக்கு சுருக்கு வைத்து கொன்றது தொடர்பாக வனத்துறையினர் அந்த பகுதியில் இருந்த மூன்று பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!