சோகம்... மழைநீர் பள்ளத்தில் மூழ்கி 3 வயது சிறுவன் மரணம்!
திருப்பூர் பவானி நகர் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணகுமார். இவர், பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா. இந்த தம்பதிக்கு சக்திவேல் (3) என்ற குழந்தை இருந்தது. பனியன் நிறுவனத்துக்கு நேற்று கிருஷ்ணகுமார் சென்றிருந்த நிலையில், சங்கீதா மற்றும் மகன் சக்திவேல் ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர்.
இந்நிலையில், மதியம் குழந்தையை வீட்டில் அமரவைத்துவிட்டு, துணிகளை காய போடுவதற்காக சங்கீதா சென்றுள்ளார். அப்போது, வீட்டின் அருகே மழைநீர் தேங்கியிருந்த பள்ளத்தில் சிறுவன் தவறி விழுந்துள்ளான். பணிகளை முடித்து வந்த சங்கீதா தனது மகனை காணாமல் போனதை அறிந்து அக்கம் பக்கத்தில் தேடினார்.
இந்த நிலையில் மழை நீர் தேங்கி கிடந்த இடத்திற்கு சென்று பார்த்த போது சக்திவேல் தண்ணீரில் மிதந்தது தெரியவந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சங்கீதா அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் சிறுவனை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தார்.
அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சக்திவேல் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா