சோகம்... காவிரியில் மூழ்கி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு!
நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் நீரில் மூழ்கி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மழைக்காலங்களில் தமிழகத்தில் அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. அவசயமில்லாமல் நீர் நிலைகளுக்குச் செல்லாதீங்க மாணவர்களே.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பிலிக்கல்பாளையம் அருகே நகப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சின்ராஜ். இவரது மகன் வினித் விமல்ராஜ் (21). இவர் தர்மபுரியை சேர்ந்த நந்தகுமார், ஆந்திராவை சேர்ந்த ரகுமான் ஆகிய தனது இரு நண்பர்களையும் அழைத்துக் கொண்டு பிலிக்கல்பாளையம் அருகே உள்ள நாகபாளையம் காவிரி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். நண்பர்கள் காவிரியாற்றில் குளிக்கச் சென்று நீண்ட நேரமாகியும் மூவரும் திரும்பாததால் வினித் விமல்ராஜின் பெற்றோருக்கு சந்தேகமும், கலக்கமும் ஏற்பட்டது.
இதனையடுத்து காவிரி ஆற்றுக்கு சென்று மூவரையும் தேடிப்பார்த்த போது கரையில் 3 பேரின் செருப்புகளும், செல்போன்களும் காவிரியாற்றின் கரையில் இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஜேடர்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி போலீசார் அங்கு விரைந்தனர். தீயணைப்பு துறையினரும் வந்தனர். காணாமல் போன மாணவர்களை தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி 3 மாணவர்களின் சடலங்களை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதே கல்லூரியில் படித்து வந்த நண்பர்கள் 3 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!