undefined

சோகம்.. பள்ளிக்கு போக சொன்னதால் மனமுடைந்த மாணவி தற்கொலை.. அதிர்ச்சியில் தாயும் தற்கொலை!

 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மாரனேரி அம்மாபட்டியில் வசித்து வருபவர்கள் பாலமுருகன்-பாப்புக்குட்டி (வயது 41), தம்பதி. தம்பதிக்கு ஐஸ்வர்யா (17), இந்துமதி (13) என்ற இரு மகள்களும், அருண்குமார் (10) என்ற மகனும் உள்ளனர். மூவரும் அருகில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், மாணவி இந்துமதி கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லவில்லை.

இந்நிலையில் தாய் இந்துமதியை பள்ளிக்குச் செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி இந்துமதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் . சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த அவரது தாய், மகள் இந்துமதி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், இதுகுறித்து செல்போன் மூலம் கணவருக்கு தெரிவித்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார்.

உடனடியாக வீட்டுக்கு வந்து பார்த்த பாலமுருகன், மனைவி மற்றும் மகள் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து, தகவல் அறிந்த மாரனேரி போலீஸார், தாய், மகளின் சடலங்களை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்