undefined

சோகம்... ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை!

 
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் இந்திரா நகரைச் சேர்ந்த சரவணன் மகன் அருண்குமார் (29). கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், வேலைக்குச் செல்லாமல் அருண்குமார் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்தாராம். இதில் தொடர்ந்து பணத்தை இழந்து வந்த நிலையில் ரூ.20 ஆயிரம் இழந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து நள்ளிரவு வீட்டில் தூக்குப் போட்டுக் கொண்டாராம். சப்தம் கேட்டு எழுந்த அவரது மனைவி, அக்கம்பக்கத்தினர் உதவியோடு அருண்குமாரை மீட்டு ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!