சோகம்... இந்தியாவின் முதல் ஆழ்கடல் மீனவப் பெண்ணின் படகு கவிழ்ந்து விபத்து! 

 

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில், ஆழ்கடலில் மீன்பிடிக்க உரிமம் பெற்ற இந்தியாவின் முதல் பெண்மணி ரேகாவின் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

திருச்சூரில் வசிக்கும் ரேகாவும் அவரது கணவர் கார்த்திகேயனும் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருண்ட எதிர்காலத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த  ஜூன் 3ம் தேதியன்று, ரேகா தம்பதியினர் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களுக்கு அன்றைய தினம் நல்ல மீன் கிடைத்தது என்றாலும், அதிகாலையில் பெரிய பெரிய அலைகளை எதிர்கொண்டதில் எதிர்பாராமல் இவர்களது படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இவர்களுக்கு அருகிலேயே ஒரு மீன்பிடி படகு இருந்ததால், கடலோர காவல்படையினர் உடனடியாக இவர்களையும், படகையும் மீட்க வந்தனர். ஆனாலும் கயிறு அறுந்து படகு முழுவதுமாக கடலுக்குள் மூழ்கியதால் படகை மீட்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இரண்டு இன்ஜின்கள், வலைகள் உட்பட ரூ.6 லட்சம் இழப்பு ஏற்பட்டது.

இந்தத் தம்பதியினர் தங்களின் சம்பாத்தியம், தங்க நகைகளை அடமானம் வைத்திருக்கும் கடன்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடன் என மொத்த பணத்தையும் செலவழித்து படகு, என்ஜின்கள் மற்றும் வலைகளை வாங்கியுள்ளனர். இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். 

"எல்லோரும் வேலைக்குச் செல்லும்போது, ​​நாங்கள் வீட்டில் மாட்டிக் கொண்டிருக்கிறோம்" என்று ரேகா மனமுடைந்து கூறுகிறார்.  நான்கு குழந்தைகளைக் கொண்ட கார்த்திகேயனும், ரேகாவும் வரும் நாட்களில் குடும்பத்தை எப்படி கவனிப்பது என்கிற கவலையில் ஆழ்ந்துள்ளனர். 

ஆழ்கடலில் மீன்பிடிக்க சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள இன்ஜின்கள் தேவைப்படுகின்றன. வேறொரு படகில் வேலை செய்ய குறைந்த பட்சம் இன்ஜினையாவது வாங்க வேண்டும் என்று ரேகா நம்புகிறாள். அவரது கணவரின் படகுக்கு வழக்கமான தொழிலாளர்கள் இல்லாததால், ரேகா இந்தியாவின் முதல் பெண் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் பெண்ணாக உருவானார். 

திருச்சூருக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்ற போது, ​​ரேகாவை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து கவுரவித்தார். 
ஒவ்வொரு மீன்பிடி பயணத்திற்கும் மண்ணெண்ணெய்க்கு சுமார் 3,500 ரூபாய் செலவாகும். சில நாட்களில் மீன்கள் நிறைந்த படகு வரும். ​​மற்ற நாட்களில் கிடைக்காது. அப்போது எரிபொருள் கடனுக்கு சரியாகப் போய்விடும். கூடுதலாக, கடல் உயிரினங்களால் வலைகள் சேதமடைவதால், அவை அடுத்த நாள் வேலை செய்ய முடியாமல் அவற்றைப் பழுது பார்ப்பதற்காக பணத்தை செலவிட வேண்டும் என்கிறார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!