undefined

மலையேற்றத்தின் போது சோகம்.. ஆடி கார் நிறுவனத்தின் தலைவர்  700 அடி பள்ளத்தில் விழுந்து பலி!

 

பிரபல ஆடி கார் நிறுவனத்தின் இத்தாலிய தலைவர் மலையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆடி உலகளவில் பிரபலமான சொகுசு கார் நிறுவனங்களில் மிகவும் விலை உயர்ந்தது. ஆடி ஒவ்வொரு நாட்டிலும் நிர்வாகத் தலைவர்களைக் கொண்டுள்ளது. இத்தாலி பிரிவின் தலைவராக ஃபேப்ரிசியோ லாங்கோ இருந்தார்.

62 வயதான லாங்கோ 2013 முதல் ஆடி இத்தாலியின் தலைவராக இருந்து வருகிறார். லாங்கோ தனது ஓய்வு நாட்களில் மலை ஏறுவதை விரும்புகிறார். கடந்த வார இறுதியில் இத்தாலி-சுவிட்சர்லாந்து எல்லையில் உள்ள அடமெல்லோ மலைத்தொடரில் சிமா பேயர் என்ற இடத்தில் ஏறினார். சிகரத்தின் 10,000 அடிகளைத் தொட்ட லாங்கோ, சிகரத்தைத் தொடுவதற்கு சில அடிகள் குறைவாக இருந்த நிலையில் தவறி  விழுந்தார்.

700 அடி பள்ளத்தில் விழுந்து லாங்கோ பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த அவரது நண்பர்கள் மீட்புக் குழுவினருக்கு தகவல் அளித்ததையடுத்து, லாங்கோவின் உடலை பள்ளத்தாக்கில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் இத்தாலியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை