சோகம்.. டீ போட்டுக்கொண்டிருக்கும் போது வெடித்து சிதறிய சிலிண்டர்.. தாய், 3 குழந்தைகள் பரிதாப பலி!
உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள தும்ரி கிராமத்தில் சிவசங்கர் குப்தா மற்றும் அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் வசித்து வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் வெளியே செல்ல சிவசங்கர் புறப்பட தயாராகி கொண்டிருந்தார். அப்போது அவரது மனைவி வீட்டுக்குள் டீ தயாரித்து கொடுத்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டில் இருந்த சமையல் எரிவாயு (Cylinder Explosion In House) பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், சிவசங்கரின் மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிவசங்கர் உயிர் தப்பினார். சத்தம் கேட்டு உடனடியாக வந்த அக்கம் பக்கத்தினர், தாயும், குழந்தைகளும் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். சமையல் எரிவாயு வெடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!