undefined

 சோகம்... வீட்டில் தூக்கிட்டு கல்லூரி மாணவி தற்கொலை!

 
நாமக்கல் மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருவர் வீட்டில் யாருமற்ற நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசா விசாரித்து வருகின்றனா்.

கரூர் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள சீராப்பள்ளி கோடங்கிநாயக்கனூா் பகுதியைச் சோ்ந்த பழனியப்பன் மனைவி ராஜேஸ்வரி (36). 

கடந்த சில வருடங்களுக்கு முன் பழனியப்பன் இறந்து விட்ட நிலையில் ராஜேஸ்வரி கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறாா். இவரது மகள் சுதா (19) கரூா் மாவட்டம் மண்மங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தாா்.

இந்நிலையில் ராஜேஸ்வரி வேலைக்கு சென்று நிலையில் சுதா மட்டும் தனியாக இருந்துள்ளாா். அப்போது சிமென்ட் அட்டை வீட்டில் மேலே இருந்த இரும்புக் குழாயில் சுதா தூக்கிட்டாா். 

இதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் சுதாவை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் சுதா ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா். இது குறித்து நல்லூா் காவல் துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!