undefined

சோகம்... நின்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதி 9 பேர் பலி.. 20 பேர் படுகாயம்!

 
மத்தியப் பிரதேச மாநிலம் மைஹார் மாவட்டத்தில், நின்றுக் கொண்டிருந்த லாரி மீது பயங்கர வேகத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று மோதியதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மைஹார் மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாடன் தேஹாத் காவல் நிலையம் அருகே சனிக்கிழமை இரவு 11 மணியளவில் கல் ஏற்றப்பட்ட லாரி நின்றுக் கொண்டிருந்தது.


பிரயாக்ராஜிலிருந்து நாக்பூருக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து நின்றுக் கொண்டிருந்த லாரியின் மோதியதாக போலீசார் தெரிவித்தனர்.  மைஹார் காவல்துறை கண்காணிப்பாளர் சுதிர் அகர்வால் கூறுகையில், காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்கள் சத்னாவுக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறினார்.

மீதமுள்ளவர்கள் மைஹார் மற்றும் அமர்பதன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர் என்று அகர்வால் கூறினார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!