undefined

 நாளை மறுநாள் முதல் 4 நாட்கள் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி!

 

 விருதுநகர் மாவட்டத்தில்  மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சந்தன மற்றும் சுந்தர மகாலிங்கம் கோவில் உலகப்பிரசித்தி பெற்றது . மலைமேல் அமைந்திருக்கும் இந்த கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்காக குறிப்பிட்ட நாட்களில் மட்டும் அனுமதிக்கப்படுவர். அதன்படி பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை நாட்களில்  பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில்  நவம்பர் 15ம் தேதி ஐப்பசி மாத பௌர்ணமியும், நாளை மறுநாள்  நவம்பர் 13ம் தேதி  பிரதோஷமும் அனுசரிக்கப்பட உள்ளது. இதனையடுத்து நவம்பர் 13ம் தேதி புதன்கிழமை முதல் நவம்பர் 16ம் தேதி சனிக்கிழமை வரை பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி  வழங்கப்பட்டுள்ளது. 


இந்தக் கோவிலுக்கு 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என கோவில் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன. அதே போல் சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.மலைப்பகுதியில் அமைந்துள்ள  ஓடைகளில் இறங்கி குளிக்க கூடாது. மலைமேல் இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை. பாலித்தீன் கேரிப்பை, மது மற்றும் போதை வஸ்து பொருட்கள் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை மலை மேல் எடுத்து செல்ல  அனுமதி இல்லை. அனுமதிக்கப்படும் நாட்களில் மழை பெய்தால் அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது. 


பிரதோஷம் மற்றும் பௌர்ணமி நாட்களில்  மகாலிங்க சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா,  செயல் அலுவலர் ராம கிருஷ்ணன் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.  நவம்பர் 16ம் தேதி  கார்த்திகை மாத பிறப்புன்று பக்தர்கள் வருகை அதிகளவு இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!