undefined

கேட்டை கடக்க முயன்ற போது சோகம்.. ரயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்ட இளம்பெண்!

 

சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ஏழாவது தெருவில் ஐஸ்வர்யா என்ற பெண் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த பெண் தரமணியில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் ஐஸ்வர்யா வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.

அப்போது, ​​திருவொற்றியூர் அண்ணாமலை நகரில் உள்ள ரயில்வே கேட்டை கடக்க முயன்றார். அப்போது மின்சார ரயிலில் அடிபட்டு ஐஸ்வர்யா தூக்கி வீசப்பட்டார். இதில் ஐஸ்வர்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

ஐஸ்வர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தத் தகவலைக் கேட்ட இளம்பெண் ஐஸ்வர்யாவின் பெற்றோர் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர். ஐஸ்வர்யாவின் உடலை பார்த்து, ‘நீ இல்லாமல் நாங்கள் எப்படி வாழ்வோம்’ என கதறி அழுதனர். இந்த சம்பவம் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!