undefined

த.வெ.க மாநாட்டு பணிகளை செய்து வீடு திரும்பிய போது சோகம்.. நிர்வாகி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு!

 

புதுச்சேரி மாநில விஜய் நற்பணி இயக்க செயலாளர் சரவணன் விழுப்புரத்தில் நடக்க இருக்கும் த.வெ.க மாநாட்டு பணிகளில் கலந்து கொண்டு வீடு திரும்பிய போது மாரடைப்பால் மரணம் அடைந்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது.

இதற்காக 85 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு மையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், மாநாட்டுப் பணிகளுக்கு தினமும் வரும் ஏராளமான பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் இன்று (21-10-24) தொடங்கி வரும் 26-ஆம் தேதி வரை மாநாட்டு வளாகத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விழுப்புரத்தில் நடந்த த.வெ.க மாநாட்டு பணிகளில் கலந்து கொண்டு வீடு திரும்பிய புதுச்சேரி மாநில விஜய் நற்பணி இயக்க செயலாளர் சரவணன் மாரடைப்பால் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று விக்கிரவாண்டி சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியவர் தனக்கு நெஞ்சுவலி இருப்பதாக கூறியுள்ளார். குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!