undefined

சோகம்.. திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இமாச்சல பிரதேச முதல்வர்..!!

 

இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு  உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர், இன்று காலை வயிற்று வலி காரணமாக சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர பரிசோதனைகள் மேற்கொண்டனர்.

பரிசோதனை முடிவில் அவருக்கு பெரிய பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. வயிற்றில் ஏற்பட்ட லேசான தொற்று காரணமாக அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் அவரது உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதல்வர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.