சோகம்.. நடிகை ரச்சிதாவின் தந்தை காலமானார்..!
Oct 20, 2023, 16:46 IST
பிரபல சின்னத்திரை நடிகை ரச்சிதாவின் தந்தை காலமானார்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ரச்சிதா, தமிழில் சரவணன் மீனாட்சி-3 தொடரின் மூலம் பிரபலமானவர். மேலும், பிக் பாஸ் சீசன்-6ல் போட்டியாளராக கலந்துகொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இந்த நிலையில், தனது இன்ஸ்டா ஸ்டேட்டஸில், தந்தை மறைந்துவிட்டதாக வருத்தத்துடன் அவர் பதிவிட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கணவரை பிரிந்து வாழும் சின்னத்திரை நடிகை தனது பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். அந்த வகையில் ரச்சிதா மகாலட்சுமியின் தந்தை ருஷிகுமார் உடல்நலக் குறைவால் காலமானார்.