undefined

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

 
 

கார்த்திகை மாதம் பொறந்துடுச்சு.. இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று ஐயப்பனைத் தரிசிப்போம்.. வாழ்க்கை ஏற்றம் பெறுவதை உணர்வோம் என்று தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருந்தும் பக்தர்கள் பம்பையில் கூடுகிறார்கள். வெளிநாடுகளில் வசிக்கும் தென்னிந்தியர்கள் சபரிமலைக்குச் செல்ல முடியாவிட்டாலும் இந்த கார்த்திகை மாதம் முழுவதும் விரதமிருந்து ஐயப்பனை மனதில் இருத்தி, வழிபடுகிறார்கள்.

நம்பியவர்களுக்கு எல்லாம் நல்லவன் கேட்டதெல்லாம் தருபவன் என்று மனமுருகி, ஐயப்பன் மனம் குளிர செய்கிறார்கள் பக்தர்கள். கேரளா மாநிலத்தில், பத்தனம்திட்டா அருகே அமைந்துள்ளது சபரிமலை.  கார்த்திகை மாதத்தின் முதல் நாளில் இருந்தே பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து, இருமுடிகட்டி ஐயப்பனை தரிசிக்கச் செல்கிறார்கள். மலை மீது அமைந்துள்ள ஐயப்பனின் ஆலயத்தை அடைய இரண்டு பாதைகள் உள்ளன. எரிமேலி என்ற இடத்தில் இருந்து அடர்ந்த காட்டுப் பாதை வழியாக 61 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம். இது பெரிய பாதை. மற்றொன்று பம்பை ஆற்றில் குளித்து முடித்து மலையேறுவது. இது ஐந்து கிலோ மீட்டர் தூர நடைபயணம். இது சிறிய பாதை.

சபரிமலைக்கு நிறைய விசேஷங்கள் உண்டு. சுயம்பு லிங்க பூமி, யாக பூமி, பலி பூமி, யோக பூமி, தபோ பூமி, தேவ பூமி, சங்கமம் பூமி என்ற 7 சிறப்புகளைக் கொண்டது சபரிமலை. ஐயப்பன் அமர்ந்திருக்கிற திருக்கோலமே விசேஷமானது. சிவனைப் போல முக்தி அளிப்பது போல தியான கோலத்தில் அமர்ந்திருக்கிறார் ஐயப்பன். அதே சமயம் விஷ்ணுவைப் போல விழித்த நிலையிலும் அருள்பாலிக்கிறார் ஐயப்பன். 

நெய் அபிஷேகம் சுவாமிக்கே என்கிற கோஷம் சபரிமலை முழுவதும் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறதல்லவா... ஆம் ஐயப்பனுக்கு பிடித்தமான அபிஷேகம், நெய் அபிஷேகம். ஒவ்வொரு பக்தனும் கர்ம சிரத்தையும் இருமுடி கட்டி சுமந்து வரும் தேங்காய்க்குள் நெய் ஊற்றிக் கொண்டு வருவது ஐயப்பனை நெய்யால் அபிஷேகம் செய்து குளிர்விக்க தான். 

சபரிமலையில் ஐயப்பன் கோவிலுக்குப் பின்புறம், மாளிகை புறத்தம்மன் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். இந்த ஆலயத்தில் தேங்காயை உடைத்து வழிபடக்கூடாது. மாறாக கீழே தரையில் உருட்டி வழிபாடு செய்ய வேண்டும். அதோடு மஞ்சள் பொடியை அம்பாளுக்கு படைத்து வழிபாடு செய்ய வேண்டும். ஐயப்பனின் அருளைப் பெற்று வாழ்வில் ஏற்றம் பெறுங்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!