சபரிமலை செல்பவர்களுக்கு விமானத்தில் சிறப்பு சலுகை... ஐயப்ப பக்தர்கள் வரவேற்பு!
கேரளாவில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தா்கள் மாலையணிந்து யாத்திரை மேற்கொள்வர். குறிப்பாக கார்த்திகை மாதம் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அதிகளவிலான பக்தர்கள் செல்வார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக கோவில் நடை நவம்பர் 15ம் தேதி முதல் டிசம்பர் 30ம் தேதி வரை திறக்கப்படுகிறது. இதேபோல் மகர விளக்கு பூஜை டிசம்பர் 26ம் தேதி முதல் ஜனவரி 30ம் தேதி வரை திறக்கப்பட இருப்பதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
அந்த வகையில் நடப்பாண்டு ஐயப்ப சீசனில் இருமுடி கட்டிக் கொண்டு விமானங்களில் பயணிக்கும் பக்தர்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சபரிமலை செல்லும் பக்தா்கள் தங்களது இருமுடியை தங்களுடன் கொண்டுசெல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, பாதுகாப்பு விதிமுறைகளில் குறுகிய காலத்துக்கு தளா்வு அளிக்கப்படும் என விமான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 2025 ஜனவரி 20ம் தேதி வரை இந்த சிறப்பு அனுமதி நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இருமுடி பைகளை எக்ஸ்ரே, இடிடி மூலம் ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே பக்தர்கள் இருமுடியை விமானத்தில் எடுத்து செல்ல அனுமதி வழங்கப்படும் என திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!