undefined

சபரிமலை இன்று மாலை நடை திறப்பு... நாளை முதல் தரிசனத்திற்கு அனுமதி..!!

 

இன்றுடன் ஐப்பசி  மாதம் நிறைவு பெறும் நிலையில் நாளை முதல் கார்த்திகை மாதம் தொடங்க உள்ளது.  ஒவ்வொரு மாதமும் மாதப்பிறப்புக்காக சபரிமலை நடை திறக்கப்படும். கார்த்திகை மாதம் பிறப்பு  மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்   இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.  நாளை நவம்பர் 17 ம் தேதி வெள்ளிக்கிழமை  காலையில் இருந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நவம்பர்  17 தேதி முதல் டிசம்பர் 27 ம் தேதி வரை அதாவது 41 நாட்கள் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டிருக்கும். மண்டல பூஜை அடுத்த மாதம் 27ம் தேதி நடைபெற உள்ளது. மண்டல பூஜைக்கு பிறகு மீண்டும் நடை  மூடப்படும்.அதன் பிறகு  மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை   டிசம்பர் மாதம் 30 ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு  டிசம்பர் மாதம் 31ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி மகர விளக்கு பூஜைகள் நடைபெறும்.

அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு மகர ஜோதி தரிசனத்தை தொடர்ந்து  ஜனவரி 19ம் தேதி வரை பூஜைகள் நடைபெற உள்ளது. இதனைத்  தொடர்ந்து  ஜனவரி 20 ம்  தேதி காலையில் பந்தளம் ராஜ குடும்ப   தரிசனத்திற்கு பின்னர் கோயில் நடை அடைக்கப்படும். இத்துடன்  நடப்பு ஆண்டுக்கான  மண்டல மகரவிளக்கு சீசன் நிறைவுபெறுவதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!