undefined

 மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நாளை சபரிமலை நடை திறப்பு!

 

 சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனுக்காக நாளை நவம்பர் 15ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.  தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார்.  இதனைத் தொடர்ந்து 18ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். அன்றைய தினம் சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோவில்களுக்கான புதிய மேல் சாந்திகளான எஸ்.அருண்குமார் நம்பூதிரி, வாசுதேவன் நம்பூதிரி ஆகியோர் மூல மந்திரம் சொல்லி பொறுப்பேற்கின்றனர்.

மறுநாள் நவம்பர் 16ம் தேதி சனிக்கிழமை முதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் தொடர்ந்து நடைபெறும். கோவில் தந்திரி கண்டரு ராஜீவரு, பிரம்மதத்தன் முன்னிலையில் புதிய மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி தலைமையில் தினமும் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், தொடர்ந்து பகல் 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உச்சி கால பூஜைக்கு பிறகு பிற்பகல்  1 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் மற்றும் அத்தாள பூஜையை தொடர்ந்து இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும். 2 மாதம் தொடர்ந்து நடைபெறும் பூஜையின் சிகர நிகழ்ச்சி  டிசம்பர் 26ம் தேதி மண்டல பூஜையும், முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக ஜனவரி 14ம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை அணிந்து செல்லும் கன்னி சாமிகள் செய்ய வேண்டிய பூஜை நடப்பு சீசனையொட்டி மரக்கூட்டம் முதல் வலிய நடை பந்தல் வரை பக்தர்கள் வரிசையாக நிற்கும் இடங்களில் தடுப்பு கம்பிகள் வழியாக குடிநீர் விநியோக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. பம்பை முதல் சன்னிதானம் வரை 8 இடங்களில் 16000  பேர் ஓய்வு எடுக்க 3 நிரந்தர பந்தல்கள் உட்பட 8 பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிலக்கல் முதல் சன்னிதானம் வரை 2,600 கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!