விஜய் தமிழகத்துக்கு ஒரு பொக்கிஷம்... எஸ்.ஏ.சந்திரசேகர் நெகிழ்ச்சி!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. மாநாட்டு ஏற்பாட்டுக்கான பணிகள் மும்மூரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த மாநாடு நல்லபடியாக நடக்கவேண்டும் என வேண்டி அக்கட்சியின் தலைவர் விஜயின் தாயார் ஷோபனா மற்றும் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இருவரும் கொரட்டூரில் உள்ள சாய்பாபா கோவிலில் இன்று சிறப்பு வழிபாடு செய்தனர். மாநாடு தொடர்பாக நடக்கும் பணிகளைக் கட்சித் தலைவர் விஜய் சிசிடிவி மூலம் கண்காணித்து வருகிறார்.
இந்நிலையில், விஜயின் சொந்த ஊரான கொரட்டூரில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் தாயார் ஷோபா இருவரும் சென்று வழிபாடு செய்தனர். வழிபாடு செய்து முடித்த பிறகு கோவிலுக்கு வருகை தந்தவர்களுக்கு வயிறு நிரம்ப அன்னதானமும் வழங்கப்பட்டது. அப்போது பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் “விஜய் தன்னுடைய முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தட்டும். அவருக்கு இன்னும் நல்ல பெயர் கிடைக்கவேண்டும் இன்னும் பெரிய நிலைமைக்கு அவர் வளரவேண்டும். மாநாடு நன்றாக நடைபெற வேண்டும் தமிழகத்துக்கு ஒரு பொக்கிஷம் கிடைக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய மகன் விஜய் அரசியலுக்கு வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி என வெளிப்படையாகக் கூறவில்லை. அதைவிட்டு மகன் தமிழ்நாட்டுக்கு ஒரு பொக்கிஷமாக இருக்கவேண்டும் என சூசகமாக கூறிச்சென்றது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!