undefined

இந்தியாவிற்கு விசிட் செய்யும் ரஷ்ய அதிபர் புதின்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த அலுவலகம்!

 

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் ஆயிரம் நாட்களைக் கடந்துள்ளது. போர் இன்னும் முடியவில்லை. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்துடன் வடகொரிய வீரர்களும் இணைந்துள்ளனர். இதனையடுத்து, ரஷ்யாவின் எல்லைக்குள் தாக்குதல் நடத்தவும், தாக்கவும் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்காவிடம் உக்ரைன் அனுமதி கேட்டிருந்தது.

உக்ரைனுக்கு உதவும் வகையில் ஏவுகணைகளை பயன்படுத்த அதிபர் ஜோ பிடன் உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக எச்சரித்துள்ள கிரெம்ளின் செய்தி தொடர்பாளர், நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி அளித்திருப்பது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்றது.

இந்த நடவடிக்கை ஏற்கனவே இருந்ததை விட சர்வதேச பதற்றத்தை அதிகரிக்கும். இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விரைவில் இந்தியா வர உள்ளதாக கிரெம்ளின் அரண்மனை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். அதிபர் புதினின் இந்தியப் பயணத்தின் தேதிகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!