தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி... எதிர்காலத்திலும் மறுக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு!
ஒவ்வொரு வருடமும் ஆர்.எஸ்.எஸ்.பேரணிக்கு அனுமதி கேட்டு மாநில அரசு, பேரணிக்கு மறுப்பு தெரிவித்து வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. பின்னர் நீதிமன்றம் சென்று அனுமதி வாங்கி பேரணி நடத்துகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் அக்டோபர் 6ம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கி உள்ள நிலையில், எதிர்காலத்திலும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதற்கு மறுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 52 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 58 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி கோரப்பட்ட நிலையில், 6 இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்படவில்லை என உயர்நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்தனர். ஆண்டு தோறும் அக்டோபர் 12ம் தேதி விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நாடு முழுவதும் பேரணி நடத்துவது வழக்கம். இந்த ஆர்.எஸ்.எஸ் பேரணி தமிழகத்தில் அக்டோபர் 6ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக தமிழகத்தில் 58 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி கோரி தமிழக காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களைக் கூறி 42 இடங்களில் அனுமதி அளித்த போலீசார், 16 இடங்களில் பேரணிக்கு அனுமதி வழங்க மறுத்துள்ளனர்.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நீதிபதி, “உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய பின்னரும் நீதிமன்ற அவமதிப்பு மறுக்கப்படுகிறது. எதிர்காலத்தில் ஆர்எஸ்எஸ் பேரணியை மறுக்கக் கூடாது என்று நீதிமன்றம் கூறியது.
அவ்வாறு பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கடுமையாக கூறினார். இதையடுத்து, அனுமதி மறுக்கப்பட்ட 16 இடங்களில் 10 இடங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், 6 இடங்களில் சில காரணங்களால் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், தமிழகத்தில் 52 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 6 இடங்களில் உரிய பாதுகாப்பு மற்றும் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் பேரணிக்கு அனுமதிக்க தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!