விபத்துக்களில் சிக்கியவர்களை காப்பாற்றுபவர்களுக்கு ரூ5000 வெகுமதி!

 

 நாளுக்கு நாள் சாலைகளில் வாகனங்கள் மட்டுமல்ல வாகனவிபத்துக்களும் அதிகரித்து வருகின்றன. விபத்துக்களில் சிக்கியவர்களை மீட்கவும், மருத்துவமனையில் சேர்க்கவும் , காவல்துறைக்கு தகவல் அளிக்கவும் கூட நேரமின்றி வாகனங்கள் விரைந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் விபத்துக்களில் சிக்கியவர்களின் உயிரை பாதுகாக்க மத்திய அரசு உயிர்க்காக்கும் நேயர்களுக்கு வெகுமதி அளித்து கௌரவித்து வருகிறது.

சாலை விபத்துக்களில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி அளிக்க தமிழக  அரசு ஆணை பிறப்பித்திருந்தது. இந்த உதவிக்கு ஏற்கனவே மத்திய அரசு  ரூ.5,000 வெகுமதி அளித்து வரும் நிலையில், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிபந்தனையும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி விபத்தில் சிக்கியவர்களை ‘கோல்டன் ஹவர்’ எனப்படும் கால அளவிற்குள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.அத்துடன் விபத்தில் சிக்கியவர்களின் உயிரையும்  காப்பாற்றியிருக்க வேண்டும். இத்திட்டம் 2026 மார்ச் 31 வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!