undefined

 ரூ.5 கோடி நஷ்டஈடு.. நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கில் நடிகர் சிங்கமுத்து பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

 
 

தன்னைப் பற்றி யூ-டியூப் சேனல்களில் அவதூறு பரப்பும் விதமாக பேட்டியளித்திருப்பதாக கூறி, நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக ரூ. 5 கோடி மான நஷ்டஈடு கேட்டு நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கில், இரு வாரங்களில் நடிகர் சிங்கமுத்து பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து நடிகர் வடிவேலு தொடர்ந்திருந்த வழக்கில், ‘பொதுமக்கள் மத்தியில் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதற்காக ரூ. 5 கோடி மான நஷ்டஈடாக வழங்க நடிகர் சிங்கமுத்துவுக்கு உத்தரவிட வேண்டும்  எனவும், தன்னைப் பற்றி அவதூறாக பேச சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும்’ எனவும் நடிகர் வடிவேலு கோரியிருந்தார்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் பதிலளிக்கும்படி, நடிகர் சிங்கமுத்துவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் சிங்கமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அறிவழகன், “இந்த வழக்கில் வக்காலத்து தாக்கல் செய்யவும், பதிலளி்க்கவும் அவகாசம் வழங்க வேண்டும்” என கோரினார்.

அதையேற்ற நீதிபதி, இந்த வழக்கில் நடிகர் சிங்கமுத்து இரு வாரங்களி்ல் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை