undefined

போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.2.60 கோடி மோசடி.. முன்னாள் வங்கி உதவிப் பொது மேலாளர் கைது!

 

பரோடா வங்கியின் முன்னாள் உதவிப் பொது மேலாளர் ஒருவர் போலி ஆவணங்களை சமர்ப்பித்து ரூ.2.60 கோடி கடன் பெற்ற வழக்கில் தொடர்புடையதாகக்  கைது செய்யப்பட்டுள்ளார்.  பாங்க் ஆப் பரோடா தலைமைக் கிளையின் உதவிப் பொது மேலாளர் லினா கோஹன் அளித்த புகாரின் அடிப்படையில், லெமூரியா ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குநர் ராஜலட்சுமியும், போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து வங்கியில் கடன் பெற்ற சதீஷ்பாபுவும் கூட்டாகப் பெற்றுள்ளனர். கால கடன் ரூ. 2.60 கோடியை வங்கியில் இருந்து திருப்பி செலுத்த தவறிய ரூ. 1.80 கோடி. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரின் பேரில், சென்னை, மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி புலனாய்வு பிரிவில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை காவல் ஆணையர் ஏ.அருண் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில்,  ராஜலட்சுமி, சதீஷ்பாபு, ராஜா ஆகியோர்,  ஜீஸ் தயாரிக்கும் ஆலை அமைக்க வங்கியை ஏமாற்றும் நோக்கில் போலி ஆவணம் சமர்ப்பித்தது தெரியவந்துள்ளது.  லெமூரியா ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் பெயரில் ஜீஸ் பவுடர் ரூ. 2.60 கோடி பெற்று அதில், ரூ.1.80 கோடி வங்கிக்கு செலுத்தாமல் இருந்துள்ளார். இந்த வழக்கில்  ராஜலட்சுமி, சதீஷ்பாபு, ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கின் விசாரணையில் முக்கிய குற்றவாளியான ராதாகிருஷ்ணன் (ஏஜிஎம்.ஆர்.டி.டி) பேங்க் ஆப் பரோடா, லெமூரியா ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வாங்காத இயந்திரங்களை வாங்கியதாக நாடகமாடி டேர்ம் லோன் வழங்கியதும் தெரியவந்துள்ளது. காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் வங்கி மோசடி புலனாய்வுப் பிரிவினர் நீண்ட நாட்களாக தலைமறைவான எதிரியை தேடி வந்த நிலையில், கடந்த 27.11.2024 அன்று மேற்கண்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான ராதாகிருஷ்ணன், பெ.வ.61, /பி. பமிடிபதி (AGM.Rtd), Bank of Baroda ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின், கைது செய்யப்பட்ட ராதாகிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!