காணமல் போன அம்மா கொடுத்த 2 ஆயிரம் ரூபாய்.. சோகத்தில் மகள் எடுத்த விபரீத முடிவு!

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே உள்ள கல்வராயன்மலை சேரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜா-விஜயகுமாரி தம்பதி. இவர்களது மகள் ராகவி. அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.  ரூ.2 ஆயிரம் கொடுத்து பத்திரமாக வைத்துக் கொள்ளுமாறு விஜயகுமாரி கூறினார். ஆனால் ராகவி அந்த பணத்தை தொலைத்துள்ளார்.

இதையறிந்த விஜயகுமாரி ராகவியை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டில் இருந்த விஷத்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர் ராகவியை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர்கள்தீவிர சிகிச்சை அளித்தும், ராகவி பரிதாபமாக இறந்தார். ராகவியின் தந்தை ராஜா போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்