கொலை வழக்கில் 1.65 லட்சம் லஞ்சம்.. போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடியாக சஸ்பெண்ட்!
கடந்த ஜூன் மாதம் விருத்தாசலம் அருகே உள்ள மாத்தூர் முருகன் கோயில் தெருவைச் சேர்ந்த பக்கிரி மகன் பாக்கியராஜ் (40), பெயின்டரும், அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர், அதே பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பிரமணியன் மகன் கலைவாணன் என்கிற ராம்கி (38) என்பவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கலைவாணன் சரமாரியாக பாக்யராஜை சரமாரியாக தாக்கினார், ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றபோதும் பலனின்றி பாக்யராஜ் இறந்தார்.
புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கலைவாணனை கைது செய்தனர். அப்போது பாக்யராஜின் உறவினர்கள் கலைவாணன், அவரது அண்ணன் கிராம உதவியாளர் மணிமாறன், தந்தை பஞ்சாயத்து தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் பாக்யராஜை அடித்து வீட்டுக்குள்ளே விட்டுச் சென்றனர். 2 நாட்களாகியும் அவரை காணவில்லை என உறவினர்கள் வீட்டுக்கு சென்று பார்த்தபோது ரத்த காயங்களுடன் வீட்டுக்குள் மயங்கிய நிலையில் கிடந்தார். அதன்பின் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது கொலைக்கு காரணமான ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது இரு மகன்கள் ஆகிய 3 பேரையும் கைது செய்ய வேண்டும். பாக்யராஜின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து மங்கலம்பேட்டை போலீசார் கலைவாணன் மற்றும் அவரது தந்தை சுப்பிரமணியனை கைது செய்தனர்.
இந்நிலையில், சுப்ரமணியன் ஜாமீனில் வெளியே வந்தபோது, இந்த வழக்கில் தனது மற்றொரு மகன் மணிமாறனை விடுவிக்க, மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பிரமணியனிடம் 3.50 லட்சம் கேட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் சந்திரசேகரனிடம் ரூ.1.65 லட்சத்தை கொடுத்தார். மீதி பணத்தை கேட்டு இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் சுப்பிரமணியனிடம் தொந்தரவு செய்து வந்துள்ளார். கூடுதல் பணம் கேட்டதால் கொடுக்க விரும்பாத சுப்பிரமணியன், உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இந்த புகாரை விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டல் விசாரித்தார். இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் குற்றம் சாட்டப்பட்ட தரப்பில் இருந்து பணம் பெற்றது நிரூபணமானதாக கூறப்படுகிறது. எனவே இன்ஸ்பெக்டர் சந்திரசேகரனை சஸ்பெண்ட் செய்து டிஐஜி திஷா மிட்டல் உத்தரவிட்டுள்ளார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!