விஜய் மாநாட்டில் ரூ.12 லட்சம் அபராதம்... 3 டன் குப்பைகள்... நொறுங்கிய நாற்காலிகள்!
விஜய் மாநாட்டில் கலந்துக் கொண்ட ரசிகர்களும், தொண்டர்களும் ஒரே நேரத்தில் மாநாடு முடிந்து கிளம்பியதில் நாற்காலிகள் உடைந்து நொறுங்கியது. இதில் ரூ.12 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்ற தவெகவின் முதல் மாநாடு தான் இதுவரையில் பேசுபொருளாக இருந்து வருகிறது. மாநாட்டில் 8 லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு குடிநீர் பாட்டில்கள், ஸ்நாக்ஸ் வகைகள் அடங்கிய பிளாஸ்டிக் பைகள், உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டன. மாநாடு முடிந்ததும் திடலை விட்டு நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் அனைவரும் கலைந்து சென்றதும், மாநாட்டுத்திடல் முழுவதும் எங்கு பார்த்தாலும் குப்பைகளாக இருந்தன.
85 ஏக்கர் பரப்பளவுள்ள மாநாட்டுத் திடலுக்கு வெளியே அதன் சுற்றுப்புற பகுதியிலும் ஆங்காங்கே குப்பைகள் குவியலாகக் கிடந்தன. அத்துடன் தவெக தொண்டர்கள் விட்டுச்சென்ற கட்சி கொடிகள், துண்டுகள், பேட்ஜ்கள் மற்றும் காலி குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள், உணவுப்பொட்டல கழிவுகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் பைகள் என சுமார் 3 டன் அளவில் குப்பைகள் சேர்ந்துள்ளன. தலைவர் விஜய்யை பார்க்க முண்டியடித்துக் கொண்டு முன்னால் வந்தவர்களை போலீசாரும், பவுன்சர்களும் தடுத்ததால் ஆத்திரத்தில் அவர்கள் பிளாஸ்டிக் நாற்காலிகளை உடைத்தெறிந்தனர்.
அந்த வகையில் உடைந்து போன நாற்காலிகள், குப்பையோடு குப்பையாகவும் கிடக்கின்றன. இதற்காக ரூ.12 லட்சம் நாற்காலிகள் சேதமடைந்ததற்காக வசூலிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குப்பைகள் சேர்ந்ததாலும், மீதமான உணவுகளை வீசிச் சென்றதாலும் அப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. மாநாட்டு திடலுக்கு வெளியே சுற்றுப்புற பகுதியில் கிடந்த குப்பைகளை மாநாட்டுக்குழுவினர், கூலித் தொழிலாளர்கள் மூலமாக பெரிய, பெரிய சாக்குப்பைகளில் அள்ளி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தவெக தொண்டர்கள் மாநாடு முடிந்ததும் கிரிவலம் போல நெடுஞ்சாலையில் விடிய, விடிய நடந்தே சென்றனர். மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் செல்போன் பயன்பாடும் அதிகரித்ததால் இணையதள சேவை முற்றிலுமாக அன்றைய மாலை முதல் நள்ளிரவு வரையில் முடங்கியது. இதனால் நிர்வாகிகள், தொண்டர்கள் ஒருவரையொருவர் செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்தனர். பலர், தாங்கள் வந்த வாகனங்கள் எங்கு நிறுத்தப்பட்டுள்ளது என கண்டுபிடிக்க முடியாமல் நிர்வாகிகளும், தொண்டர்களும் தவித்தனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!