undefined

ரூ.10,000 லஞ்சம்.. கையும் களவுமாக சிக்கிய பெண் பில் கலெக்டர்!

 

காலி மனைக்கு வரி விதிப்பதற்காக ரூ.10,000 லஞ்சம் வாங்கிய பெண் பில் கலெக்டர் கையும், களவுமாக சிக்கினார். விழுப்புரம் நகராட்சி மகாராஜபுரம் பகுதியில் உள்ள தனது 1,600 சதுர அடி காலி மனைக்கு வரி விதிக்க விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் இளங்கோவன் விண்ணப்பித்துள்ளார். பேரூராட்சி அலுவலகத்தில் பில் கலெக்டராக பணிபுரியும் விழுப்புரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்த குணா (49) என்பவர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத இளங்கோவன், விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் அறிவுரைப்படி இளங்கோவன் இன்று ரூ.10 ஆயிரத்தை பில் கலெக்டர் குணாவிடம் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் குணாவை கைது செய்து, அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தி, அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!