மணிப்பூரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களுக்கு ரூ10லட்சம் நிவாரண உதவி!!

 

மணிப்பூரில் இரு பழங்குடியின சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல்   மே 3ம் தேதி பெரும் இனக்கலவரமாக வெடித்துள்ளது. தொடர்ந்து 2 மாதங்களாக நீடித்த வன்முறையால் இதுவரை 175 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள்வெளியாகியுள்ளன. இந்தபோராட்டத்தில்  ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடு, உடமைகளை விட்டு அகதிகளாக வெளியேறி விட்டனர். ஏராளமான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான  இழப்பீடு வழங்கும் திட்டத்துக்கு மணிப்பூர் மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


 இது குறித்து  மாநில உள்துறை ஆணையாளர் ரஞ்சித்சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பில்  " மணிப்பூர் கலவரத்தில் கூட்டுப் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம்வரை இழப்பீடு வழங்கப்படும். பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.7 லட்சம்வரை வழங்கப்படும். ஆசிட் வீச்சால் முகம் சிதைந்தவர்களுக்கு ரூ.7 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை அளிக்கப்படும்.


உயிரிழந்த மற்றும்   காணாமல் போன பெண்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம்வரை இழப்பீடு அளிக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கோ,   அவர்கள் உயிரிழந்து விட்டால் அவர்களுடைய குடும்பத்தினருக்கோ இந்த இழப்பீடு வழங்கப்படும்" எனக்  கூறப்பட்டுள்ளது. மணிப்பூர் ஐ.ஜி  விடுத்த செய்திக்குறிப்பில் , " மணிப்பூர் கலவரத்தில் 175 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 1,108 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 32 பேர் காணாமல் போனார்கள். 4786 வீடுகளுக்கு தீவைக்கப்பட்டுள்ளது. 386 வழிபாட்டு தலங்கள் சூறையாடப்பட்டன. கலவரக்காரர்களால் கொள்ளையடிக்கப்பட்ட துப்பாக்கிகளில், 1,359 துப்பாக்கிகளும், 15000 வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.


மணிப்பூர் கலவரத்தில் 5172 தீவைப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. பலியான 175 பேரில் 79 பேரின் உடல்களுக்கு மட்டுமே  உரிமை கோரப்பட்டுள்ளது.  96 உடல்கள் உரிமை கோரப்படவில்லை. 9 உடல்கள் யாரென அடையாளம் தெரியவில்லை. இந்த பெரும் கலவரத்தில்  9332 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூரில் இயல்பு நிலையை திரும்ப செய்ய போலீஸாரும், மத்தியப் படைகளும் கூட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றன" எனக் கூறியுள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை