undefined

 60 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ்   அபார வெற்றி... பிளே ஆப் வாய்ப்பை இழந்த பஞ்சாப்!

 
 

17-வது ஐபிஎல் தொடரில்   58-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக டு பிளெசிஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர்.

இதில் டு பிளெசிஸ் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த வில் ஜாக்ஸும் 12 ரன்களில் வெளியேற, பட்டிதர் - கோலியுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி காட்ட தொடங்கியது. பட்டிதர் 6 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் என 23 பந்திலேயே 55 ரன்களை விளாசினார். பெங்களூரு அணி 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்தபோது திடீரென மழை குறுக்கிட்டது.


அத்துடன் சிறிது நேரம் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. விராட் கோலி , கேமரூன் கிரீன் களத்தில் இருந்தனர்.அரைமணி நேரம் பாதிக்கப்பட்ட ஆட்டம், மழை நின்ற பின் மீண்டும் தொடங்கி நடைபெற்றது. தொடர்ந்து விராட் கோலி அதிரடி காட்டி அரைசதம் அடித்தார். மறுபுறம் கேமரூன் கிரீன் நிலைத்து ஆடினார்.
அரைசதம் கடந்த பிறகு விராட் கோலி பஞ்சாப் அணியின் துவம்சம் செய்தார். சிறப்பாக ஆடிய விராட் கோலி சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 47 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடி காட்டிய  கிரீன் 27 பந்துகளில் 46  ரன்கள் எடுத்தார். இறுதியில் கேமரூன் க்ரீன், தினேஷ் கார்த்திக் இணைந்து அதிரடியாக விளையாட ஸ்கோர் உயர்ந்தது. கேமரூன் க்ரீன் 27 பந்துகளில் 46 ரன்களும், தினேஷ் கார்த்திக் 18 ரன்களும் எடுத்தனர். இதனால் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்களை எடுத்தது.
இதனையடுத்து 242 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன பிரப்சிம்ரன் சிங் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ரிலீ ரோசோவ் ஆரம்பம் முதலே அதிரடியில் வெளுத்து வாங்கினார். ஆனால் மறுபுறம் பேர்ஸ்டோவ் 27 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.


அதிரடியாக விளையாடிய ரோசோவ் 27 பந்துகளில் 61 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். மிடில் ஓவர்களில் பெங்களூரு அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷசாங்க் சிங் 37 ரன்களில் ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழந்தார்.  பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஜித்தேஷ் சர்மா 5 ரன்களிலும், லிவிங்ஸ்டோன் டக் அவுட்டிலும், கேப்டன் சாம் கர்ரண் 22 ரன்களிலும், அசுதோஷ் சர்மா 8 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
வெறும் 17 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த பஞ்சாப் 161 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் பெங்களூரு 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ரோசோவ் 61 ரன்கள் அடித்தார். பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக சிராஜ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த தோல்வியின் மூலம் பஞ்சாப் அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டது. 12 போட்டிகளில் விளையாடி உள்ள அந்த அணி 4 வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!