3,18,000 கோடி: உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ரோஷிணி நாடார்...!!

 

உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் HCL நிறுவன தலைவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா 60வது இடத்தை பிடித்துள்ளார். இவர்  HCL நிறுவனர் ஷிவ் நாடார் மகள் இந்தியாவின் பணக்காரப் பெண்.  ரோஷினி நாடார்  HCLTech என்ற பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவராக இருந்து வருகிறார்.    ரூ. 3,18,000 கோடி சந்தை மூலதனம் கொண்ட தொழில்நுட்ப நிறுவனத்தின் தலையாய பொறுப்பில் உள்ளார்.   ஷிவ் நாடார்  சொத்து மதிப்பு  27.3 பில்லியன் டாலர்கள், அதாவது ரூ.2,27,010 கோடி ஆகும்.
  ரோஷினி 2018 ல், அவர் The Habitats என்ற அறக்கட்டளையை நிறுவியுள்ளார். இதன் மூலம்  இந்தியாவின் பூர்வீக இனங்கள் மற்றும் இயற்கை வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளித்து வருகிறார்.  2019  முதல் அனிமல் பிளானட்/டிஸ்கவரி சேனல்களுக்காக On The Brink என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தயாரித்து வருகிறார் ரோஷ்னி. இந்த நிகழ்ச்சி இந்தியாவில் மிகவும் அழிந்து வரும் வனவிலங்கு இனங்களை அடிப்படையாகக் கொண்டது  .

ஒவ்வொரு ஆண்டும் சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலை அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் பத்திரிகை  வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 4 இந்திய பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.    அவர்களில் முதன்மையானவர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்பது குறிப்பிடத்தக்கது. 
 இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஃபோர்ப்ஸ் பட்டியலில் 32வது இடத்தில் இருக்கிறார்.  HCL நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா 60வது இடத்தை பிடித்துள்ளார்.  

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா தலைவர் சோமா மோண்டல் 70வது இடத்திலும், பயோகான் நிறுவனர் கிரண் மஜும்தார்-ஷா 76வது இடத்தையும் பிடித்துள்ளனர்.  2019 முதல் நிர்மலா சீதாராமன்  இந்தியாவின் நிதியமைச்சராக இருந்து வருகிறார்.  அவர் மத்திய கார்ப்பரேட் விவகாரத் துறை  அமைச்சராகவும் பதவி வகித்தவர்.   இந்தியாவின் 28வது பாதுகாப்பு அமைச்சராக நிர்மலா சீதாராமன் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்திராகாந்திக்கு பிறகு பாதுகாப்பு   மற்றும் நிதித்துறை இரண்டிலும் அமைச்சர் பதவி வகித்த   பெண் என்ற பெருமையை பிடித்தவர்.   கடந்த ஆண்டு சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன்  36வது இடத்தைப் பிடித்தார்.

  ஃபார்ச்சூன் அவரை இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த பெண் என்றும் அறிவித்தது. பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியப் பெண் தொழிலதிபர் ஷிவ் நாடாரின் மகள் ரோஷ்னி நாடார். இவர் ஜூலை 2020 முதல் HCL ன் தலைவராக இருந்து வருகிறார்.  ஃபோர்ப்ஸ் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா முதலிடத்தை பிடித்துள்ளார். ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட்  2வது இடத்திலும்,  இந்திய வம்சாவளி  அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்  3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!