undefined

குளம் போல் மாறிய சாலைகள்... சுரங்கப்பாதையில் சிக்கிய பேருந்து... 35 பயணிகள் மீட்பு!

 

சென்னை உட்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளை சென்னை உட்பட 4 மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மழை பெய்து வரும் நிலையில், கோவையில் நேற்று தொடர்ந்து சில மணி நேரங்களாக மழை பெய்ததில், சாலையோர தாழ்வான பகுதிகள், சுரங்கப்பாதைகளின் கீழ் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.

நேற்று அக்.14 மதியம் மற்றும் மாலை நேரங்களில் லேசாக மழை பெய்யத் தொடங்கி நின்று விட்டது. அதன் பின்னர்,  5 மணிக்கு மேல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது.

சிறிது நேரமே பெய்தாலும் மழையின் தாக்கம் அதிகளவில் இருந்ததால் உக்கடம், சிங்காநல்லூர், பீளமேடு, லட்சுமி மில், அண்ணா சிலை சந்திப்பு அருகே, சாயிபாபாகாலனி, நவஇந்தியா, கணபதி, காந்திமாநகர், விளாங்குறிச்சி சாலை, குனியமுத்தூர், போத்தனூர், கவுண்டம்பாளையம், ஆர்.எஸ்.புரம், சிவானந்தாகாலனி உள்ளிட்ட மாநகரின் பல்வேறு இடங்களிலும், புறநகரப்  பகுதிகளிலும் சாலையோர தாழ்வான இடங்களிலும், சுரங்கப்பாதைகளின் கீழ் பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. முழுமையாக தூர்வாராத மழைநீர் வடிகால்கள், தூர்வாரப்படாத சாக்கடைகள் போன்றவற்றால் மாநகரின் பல்வேறு உட்புறப் பகுதிகளில் ஆங்காங்கே குளம் போல் மழைநீர் தேங்கிக் காணப்பட்டது.  

தாழ்வான பகுதிகளில் உள்ள சில வீடுகளில் மழைநீர், கழிவுநீருடன் கலந்து புகுந்தது. ஆவாரம்பாளையம் பகுதிகளில் வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி நிர்வாகத்தினர் அவர்களை மீட்டு அருகில் ஏற்பாடு செய்திருந்த நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அதேபோல், மேட்டுப்பாளையம், அன்னூர், பேரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 10 ஓட்டு வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. சில இடங்களில் குடிசை வீடுகளும் சரிந்தன.

பேருந்துக்கு காத்திருந்த பயணிகள் குளம் போல் தேங்கி காணப்பட்ட நீரில் நனைந்தபடி பேருந்தில் ஏறிச் சென்றனர். சிவானந்தாகாலனி ரயில்வே சுரங்கப்பாதையின் கீழ் கனமழையின் போது தனியார் பேருந்து சிக்கியது. நேரம் ஆக ஆக தண்ணீர் அளவு அதிகரித்தால், தகவல் அறிந்த கோவை தெற்கு, கோவை வடக்கு தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்றுபேருந்தில் இருந்த 35 பயணிகளை மீட்டனர். மேலும், ‘டோப்’ போட்டு வாகனத்தை இழுக்க பயன்படும் இழுவை கிரேன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு தண்ணீரில் சிக்கிய பேருந்து வெளியே கொண்டு வரப்பட்டது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!