மேற்கு வங்கத்தில் வெடித்த கலவரம்.. போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்கள் மீது கடும் தாக்குதல்!
மருத்துவர் கொலையை கண்டித்து மேற்கு வங்கத்தில் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் மாநில அரசைக் கண்டித்து பாஜக நாளை பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இன்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அனைவரும் தாக்கப்பட்ட நிலையில் பாஜகவின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கை கொல்கத்தா காவல்துறை கையாளும் விதம் குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனிடையே, உண்மையான குற்றவாளிகளை பாதுகாக்க திரிணாமுல் அரசு முயற்சிப்பதாகவும், மம்தா பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி அம்மாநிலத்தில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
குறிப்பாக அங்குள்ள மருத்துவ மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி இன்று மம்தா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மாநில தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதற்காக மாணவர்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் பேரணியாக சென்று தலைமை அலுவலகம் நோக்கி வந்தனர். ஆனால், இந்த போராட்டத்துக்கு மாநில அரசு அனுமதி அளிக்காததால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது போராட்டக்காரர்கள் ரயில் தண்டவாளத்தில் இருந்த கற்களை எடுத்து போலீசார் மீது வீசினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். மேலும் தண்ணீர் புகை வீசி கலைக்க முயன்றனர். இதனால் அப்பகுதி போர்க்களமாக மாறியது.
மாணவர்கள் மீதான காவல்துறை தாக்குதலுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், தற்போது பாஜக நேரடியாக போராட்டக் களத்தில் குதித்துள்ளது. ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கொலை வழக்கில் மேற்கு வங்க அரசுக்கு எதிராக பாஜக பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.மேற்கு வங்க அரசைக் கண்டித்து நாளை 12 மணி நேர பந்த் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சரும் மேற்கு வங்க பாஜக தலைவருமான சுகந்தா மஜும்தார் அறிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!