undefined

ஓடும் பைக்கில் சாகசம்.. அட்ராசிட்டி செய்த இளைஞர்களை கூண்டோடு பிடித்த போலீசார்!

 

ஓடும் பைக்கில் நின்று கொண்டு பயணித்த மற்றும் அபாயகரமான புஷ்-அப்களை செய்த இளைஞர்களை பீகார் போலீசார் கைது செய்தனர். இந்தியாவில், சமீபகாலமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேக வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பைக் சாகசத்தில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் தங்களது பைக் சாகச வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

வீடியோவில், நிரஜ் யாதவ் என்ற இளைஞர் இரு சக்கர வாகனத்தில் நின்றபடியே கடந்து செல்கிறார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ பதிவை பலரும் ஷேர் செய்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.மேலும், இளைஞர் ஒருவர் தனது பைக்கில் புஷ்-அப் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன், பைக் சாகசம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்து, நன்னடத்தையில் விடுவித்தனர். இருப்பினும், அந்த இளைஞர் தனது பைக் சாகசத்தை நிறுத்தவில்லை. இந்த வழக்கில், இருவரையும் பீகார் போலீசார் கைது செய்தனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!