உறைய வைக்கும் வீடியோ... டூவீலரில் சென்றவரை தாக்கிய காண்டாமிருகம்... துடிதுடித்து பலியான நபர்!
அஸ்ஸாம் மாநிலத்தில் மோரிகான் பகுதியில் அமைந்துள்ளது போபிடோரா வனவிலங்கு சரணாலயம். அப்பகுதியில் வசித்து வருபவர் 37 வயது சதாம் உசேன். இவரை திடீரென காண்டாமிருகம் கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சதாம் உசேன் பைக்கில் சென்று கொண்டிருந்த போது காண்டாமிருகம் துரத்தி வந்து அவரை கொடூரமாக தாக்கியது.
அஸ்ஸாமில் அமைந்துள்ள போபிடோரா வனவிலங்கு சரணாலயத்தில் பல்வேறு வகையான விலங்கினங்களின் புகலிடமாக இருந்து வருகிறது. எனினும், விலங்குகள் சரணாலய எல்லையை மீறி வெளியே வரும் நிகழ்வுகள் சில சமயங்களில் நடைபெற்று விடுவதும் உண்டு. இச்சம்பவம் அதே மாதிரி ஒரு சமயத்தில் நிகழ்ந்திருக்கலாம் எனவும் வனவிலங்குகள் மற்றும் மனிதர்கள் இடையிலான மோதலின் பயங்கர விளைவுகளை காட்டுவதாகவும் சரணாலயம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!