undefined

பெண் இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் திருப்பம்.. மதிமுக நிர்வாகி வளையாபதி கைது!

 

காஞ்சிபுரத்தில் ரியல் எஸ்ட்டேட் தொழில் போட்டி காரணமாக மதிமுக மாவட்ட செயலாளர் ஓய்வு பெற்ற பெண் இன்ஸ்பெக்டரைக் கொலைச்  செய்தது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று குடும்பத்தினருடன் காரில் சென்றுக் கொண்டிருந்த மதிமுக பிரமுகர் வளையாபதியைப் போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரத்தில் ஓய்வு பெற்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொலைச் செய்யப்பட்ட நிலையில், ஆரம்பத்தில் போலீசார் பெண் இன்ஸ்பெக்டரின் மரணத்தை சந்தேக மரணம் என பதிவு செய்திருந்தனர். தற்போது இந்த வழக்கு விசாரணையின் அடுத்தடுத்த திருப்பங்களிடையே சந்தேக மரணத்தைக் கொலை வழக்காக மாற்றிப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் காலண்டர் பகுதியில் வசித்து வந்தவர் கஸ்தூரி. போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், அழுகிய நிலையில் கிடந்த அவரது சடலத்தைப் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இது தொடர்பாக போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் இறந்த வழக்கை பின்னர் கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரித்தனர். இதில், மதிமுக.,வைச் சேர்ந்த காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வளையாபதி இந்த கொலையில் ஈடுபட்டது உறுதியான நிலையில், சென்னையில் இருந்து குடும்பத்தோடு காஞ்சிபுரம் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த வளையாபதியை காஞ்சிபுரம் கருக்குப்பேட்டை அருகே போலீசார் மடக்கிப் பிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொலையில் ஈடுபட்ட வளையாபதியின் நண்பர் பிரபு என்பவரைத் தேடி வருகின்றனர். 

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா