undefined

சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு.. ஆஸ்திரேலியாவில் நிறைவேறியது புதிய மசோதா!

 

ஆஸ்திரேலிய அரசு சமீபத்தில் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த ஒரு கடுமையான முடிவை எடுத்தது. ஆஸ்திரேலியாவில் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்ய தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்திருந்தார்.

இதன்படி, 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் வகையில் இணையக் கட்டுப்பாடுகளை விதிக்கும் புதிய மசோதா இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

X, TikTok, Facebook மற்றும் Snapchat போன்ற தளங்களில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த அனுமதிக்கும் தளங்களுக்கு 150 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்று மசோதா வலியுறுத்தியது. கடந்த இரண்டு நாட்களாக இந்த மசோதா மீதான விவாதத்துக்குப் பிறகு, நேற்று ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!