undefined

நெகிழ்ச்சி... 80 வயதில் மகனின் உயிரை காப்பாற்றிய தாய்!
 

 

 
இந்தியாவில் தலைநகர் டெல்லி ரோகிணி பகுதியில் வசித்து வருபவர்  ராஜேஷ். இவர் தொழிலதிபராக இருந்து வருகிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரக நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் 2 சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன. இந்நிலையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் ராஜேஷின் 80 வயது தாய் தர்ஷனா ஜெயினின் சிறுநீரகங்கள் ராஜேஷுக்கு பொருத்தமாக இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். 

ஆனால் ராஜேஷ் தனது தாய் வயதானவர் அவரது சிறுநீரகத்தை எடுக்க வேண்டாம் என முடிவு செய்தார்.சிறிது நாளிலேயே  ராஜேஷின் உடல்நலம் மோசமானது. இதனால் மாற்று அறுவை சிகிச்சைக்கு ராஜேஷ் ஒப்புக்கொண்டார். 

இந்நிலையில் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்ற அறுவை சிகிச்சை நிபுணர் எச் எஸ் பட்யால் தலைமையிலான மருத்துவ குழுவினர் வெற்றிகரமாக சிறுநீரக மாற்று  அறுவைசிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு 4வது நாளில் தர்ஷனா ஜெயின் குணமடைந்து விட்டார்.  அதிலிருந்து 2 நாட்களுக்கு ராஜேஷ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது தாயும், மகனும் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

 

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?