நடுக்கடலில் கவிழ்ந்த அகதிகளின் படகு.. 49 பேர் பலி.. பலர் மாயம்.!

 

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஏராளமானோர் ஏமன் வழியாக வளைகுடா நாடுகளுக்கு வேலை தேடி அகதிகளாக செல்கின்றனர். ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்தாலும், ஏமனுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவில் இருந்து சுமார் 260 அகதிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று ஏடன் வளைகுடா வழியாக சென்று கொண்டிருந்தது. நேற்று இரவு ஏமன் கடற்கரை அருகே வந்தபோது படகு கடலில் கவிழ்ந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 31 பெண்கள் மற்றும் 6 குழந்தைகள் உட்பட 49 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 71 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், சுமார் 140 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் ஐ.நா. என சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!