வீட்டை விட்டு வெளியே வராதீங்க... இன்றும் நாளையும் ரெட் அலெர்ட்... !
தமிழ்நாட்டில் வங்கக்கடலில் ஃபெஞ்சல் புயல் மணிக்கு 13கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்தப் புயல் சென்னையில் இருந்து 110கி.மீ தொலைவில் புயல் நிலைகொண்டுள்ளது. இன்று பிற்பகல் கரையை கடக்கவிருந்த புயல் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை வரை தாமதமாகலாம் என வெதர்மேன் பிரதீப் ஜான் மற்றும் ஹேமச்சந்திரன் ஆகியோர் கணித்துள்ளனர்.
மேலும், நாளை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஒரிரு இடங்களில் அதிகன மழைக்கான ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.இந்தப் புயல் மேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக – புதுவை கடற்கரையை காரைக்காலிற்கும் – மகாபலிபுரத்திற்கும் இடையே, கரையைக் கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!