undefined

 தென் மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்... வீட்டை விட்டு வெளியே வராதீங்க!

 

 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தென் தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக மழை மிரட்டி வருகிறது. இந்நிலையில் இன்று தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் அப்பகுதிகளுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து  இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இன்று  தென்மாவட்டங்களில் 21 செ.மீ.க்கும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   ஏற்கனவே கனமழை பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிகனமழை பெய்யும் என எச்சரித்துள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று இரவு முதல் தென்தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில் சில இடங்களில் கனமழை பெய்த நிலையில் பலஇடங்களில் தொடர்ந்து லேசானது முதல் மிதமானது வரை மழை என்பது பெய்து வருகிறது. இந்நிலையில் தான் இன்று தென்தமிழகத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!