undefined

சென்னை உட்பட இந்த மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் அறிவிப்பு!

 
நாளை புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில் வலுவிழந்த நிலையில் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதே சமயம் சென்னை உட்பட இந்த மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென்கிழக்கே 280 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 380 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 480 கி.மீ. தொலைவிலும் நிலவி வருகிறது.  

இது, வடக்கு – வடமேற்கு திசையில் இலங்கை கடற்கரையை ஒட்டியப்படி, தமிழக கடற்கரையை நோக்கி மிக மெதுவாக நகா்ந்து வருகிறது.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று நவம்பர் 27ம் தேதி புதன்கிழமை புயலாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மெல்ல 2 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது.

இதனையடுத்து இன்று நவம்பர் 29ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, காஞ்சிபுரம், திருவள்ளூர்   மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

நாளை நவம்பர் 30ம் தேதி பெங்கல் புயல் கரையை கடக்கும் போது விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதி கனமழைக்கும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது" என்று கூறினார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!