undefined

6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்... வீட்டை விட்டு வெளியே வராதீங்க....!!

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. அத்துடன்  தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழையும் சில மாவட்டங்களில் கனமழையும்  பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


தமிழத்தில் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மிக கனமழை பெய்யும் என  தெரிவித்துள்ளதால் நிர்வாக காரணங்களுக்காக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் நேற்று மாலை முதல் தற்போது வரையில் தொடர்கனமழை   பெய்து வருகிறது. அதன்படி இன்று, நாகப்பட்டினம்,  மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம்   மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு  ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் எனவும் சென்னையில் ஓரிரு இடங்களில் மிதமான மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் நவம்பர் 16 ம் தேதி வியாழக்கிழமை  கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!