இன்று இந்தியா முழுவதும் 51000 பேருக்கு பணிநியமன ஆணை!!
இந்தியா முழுவதும் ரோஜ்கார் திட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் 51,000 க்கும் மேற்பட்ட பணி நியமனங்களை செய்கிறார். இதன்படி ரோஜ்கார் மேளா நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெற்று வருகிறது.இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் “பிரதமர் மோடி 28 ஆகஸ்ட் 2023 அன்று காலை 10:30 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் 51,000க்கும் மேற்பட்ட நியமனக் கடிதங்களை விநியோகிக்கிறார். பணி நியமனத்திற்கு பிறகு பிரதமர் உரையாற்றுவார்” என்று பிஎம்ஓ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்கள், உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்களில் கான்ஸ்டபிள், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் பொதுப்பணி அல்லாத கேடர் பதவிகள் போன்ற பல்வேறு பதவிகளில் சேர உள்ளனர். மேலும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை , எல்லைப் பாதுகாப்புப் படை , அஸ்ஸாம் ரைபிள்ஸ், மத்திய தொழில் பாதுகாப்புப் படை , சாஷ்த்ரா சீமா பால் போன்ற மத்திய ஆயுதப் போலீஸ் படைகளில் பணியாளர்களைச் சேர்ப்பதை எம்ஹெச்ஏ நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தோ திபெத்திய எல்லைக் காவல்துறை , போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் மற்றும் டெல்லி காவல்துறை என பல்வேறு இடங்களில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
“வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கும் பிரதமரின் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான ஒரு படியாக ரோஜ்கார் மேளா உள்ளது. இத்திட்டம் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் ஒரு ஊக்கியாக செயல்படும் எனவும், இளைஞர்களுக்கு அவர்களின் அதிகாரம் மற்றும் தேசிய வளர்ச்சியில் பங்கேற்பதற்கும் வாய்ப்புகளை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!