ரியல் சம்பவக்காரன்.. ஒரே ஒரு ஆளு தான்.. வடக்கில் பாஜகவை ஓட ஓட விரட்டிய பயங்கர சம்பவம்!

 

18வது லோக்சபா தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பா.ஜ.க, தனது கூட்டணியுடன் ஆட்சி அமைக்கும் கட்டத்தை எட்டியுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) எண்ணப்பட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றது.

இதில் பாஜக 240 இடங்களைக் கைப்பற்றியது. மத்தியில் ஆட்சி அமைக்க தேவையான 272 தொகுதிகளில் பாஜக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணியில் அங்கம் வகித்த தெலுங்கு தேசம் 16 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழா வரும் 8ம் தேதி நடைபெற உள்ளது.

ஒருபுறம், சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக கடும் பின்னடைவை சந்தித்ததற்கு பல காரணங்கள் இருந்தாலும், வடமாநில யூடியூபரால் அக்கட்சிக்கும் தோல்வி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஹரியானாவைச் சேர்ந்த பொறியியலாளர் துருவ் ராத்தே, தனது பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். யூடியூப்பில் மட்டும் அவருக்கு 21.6 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர். அவரது வீடியோக்கள் 4.1 பில்லியன் (41 கோடி) பார்வைகளைக் கடந்துள்ளன.

இதற்கிடையில், தேர்தல் காலத்தில் மோடி அரசு குறித்து அவர் வெளியிட்ட பல வீடியோக்கள் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றன. 'மோடி: தி ரியல் ஸ்டோரி' என்ற ஒரே ஒரு வீடியோ மட்டும் 28 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக வட மாநிலங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. மேலும், மோடி அரசுக்கு எதிராக மக்கள் திரும்பியுள்ளதாக ஆங்கில ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று கூட வாக்கு எண்ணிக்கையின் போது, ​​“சாதாரண மனிதரின் அதிகாரத்தை தவறாக கணக்கிடாதீர்கள்” என தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!