ரெப்போ வட்டி விகிதம்.. புதிய அப்டேட் கொடுத்த ஆர்.பி.ஐ கவர்னர்..!
வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமின்றி 6.5 சதவிதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், ரெப்போ விகிதத்தில் மாற்றம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடப்பாண்டில் முதல் கூட்டத்திலும் முந்தைய வட்டி விகிதமே நீடிக்கும் எனத் தெரிவித்துள்ளது. பணவீக்கம் 4 சதவீத என்ற இலக்கை ஒட்டி நிலவுவதாலும், பொருளாதாரம் மீண்டெழுவதாலும் ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதத்திலேயே தொடரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் அறிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் வரை 5 முறை ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யாமல் அதற்கும் முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே தொடர்வது குறிப்பிடத்தக்கது.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க