ரவீந்திர ஜடேஜா பாஜகவில் இணைந்தார்.... !
நட்சத்திர கிரிக்கெட் வீரரான ரவீந்திர ஜடேஜா, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் டி20 ஓய்வு அறிவிப்பிற்கு பிறகு, ஜடேஜாவும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அதன்பிறாகு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள், டி20, ஒருநாள் கிரிக்கெட் என எதிலும் அவரது பெயர் இடம் பெறவில்லை. மூன்று வடிவத்திற்கும் மூன்றுவிதமான அணிகளை தயார்செய்யும் விதத்தில் செயல்பட்டு வரும் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், ரவீந்திர ஜடேஜாவை டெஸ்ட் அணிக்கான வீரராக மட்டுமே பார்ப்பதாக தெரிகிறது.
ரவீந்திர ஜடேஜாவின் குடும்பத்தில் ஏற்கனவே 2019ல் ரிவாபா ஜடேஜா பாஜகவில் சேர்ந்தார் மற்றும் 2022ல் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டார். ரவீந்திர ஜடேஜாவும் தனது மனைவிக்காக பிரச்சாரம் செய்தார், மேலும் அவர் தேர்தலில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதேநேரத்தில் ரவீந்திர ஜடேஜாவின் தந்தையும் சகோதரியும் அந்த நேரத்தில் காங்கிரசுக்கு பிரச்சாரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!